ஐந்து வயதில் அப்பா இறந்துபோனால் அப்படி அழும் பிள்ளை, தன் அறுபது வயதில் எண்பது வயது தந்தை இறக்கும் போது அவ்வளவு கலங்காதது ஏன்?. அப்பாவின் முக்கியத்துவம் குறைந்து விட்டதோ? காசும், பணமும், சுற்றமும், நட்பும் அப்பாவின் முக்கித்துவதை குறைத்து விட்டது. இந்த பாசம், நேசம் எல்லாம் பொய்யோ? நினைத்து பாருங்கள் உங்கள் ஐந்து வயது முதல் மீசை முளைத்து "எல்லாம் எனக்கு தெரியும் " என்று சொல்ல ஆரம்பித்த நாள் வரை.. அப்பா எப்போ வீடு திரும்புவார் என்று காத்திருந்த மாலை நேரங்கள், உலகத்தில் எல்லாம் வல்ல வீரனாய் அப்பாவை நினைத்து இருந்த நாட்கள்.. இதுதான் இயற்கை, இங்கு எல்லாம் தேவைகள் பொருட்டே, அப்பா, அம்மா, பாசம் நேசம், நண்பன், மனைவி, மக்கள், அரசு எல்லாம் ஒருவர் தேவை மற்றவர் பூர்த்தி செய்யும் வரைதான். இது புரியாமல் தான் நாம் மிகவும் குழப்பமுருகிறோம். எனக்கும் இப்போது ஐம்பது வயது, என் தந்தையிடம் பேசி ஒரு வாரம் ஆகிறது. மருந்து, மாத்திரை, வேளைக்கு உணவு, உடை, நல்ல இருப்பிடம்,...