தேவைகள்

நல்ல பெற்றோர், உறவுகள் வேண்டும்
தாயை மதிக்கும் தந்தை வேண்டும்
புரிந்து பழகும் தோழமை வேண்டும்
தூய்மையான இல்லம் வேண்டும்
நல்ல காற்று, குடிநீர் வேண்டும்
எச்சில் இல்லா பண்டம் வேண்டும்
எளிமையான உணவு வேண்டும்
சோம்பல், சலிப்பில்லாத வாழ்கை வேண்டும்
நன்றி மறவா நெஞ்சம் வேண்டும்
எல்லோற்குதவும் எண்ணம் வேண்டும்
உதவிட வேண்டிய வசதிகள் வேண்டும்
இயற்கை ,விலங்கு ,பறவை எல்லாம்
கருணையோடு மதித்திட வேண்டும்
நித்திரை நித்தம் நிகழ வேண்டும்
பூமியை வலம் வரும் ஆர்வம் வேண்டும்
தேடல் என்பது இயல்பாய் வேண்டும்
குருவின் திருவருள் அமைய வேண்டும்
மரணம் பற்றிய புரிதல் வேண்டும்
புரிந்த பின்னே மரணம் வேண்டும்

Comments

Popular posts from this blog

5th Oct 21