ஓட்டம் - Micro Story
கணேசன் பத்தாவது முறையாக டம்ளரில் வெந்நீறையும், உப்பும் கலந்து அது தொண்டையை நனைக்கும் வரை கொப்பளித்துவிட்டு மறுபடியும் சோபாவில் வந்து அமர்ந்தான். மணி பன்னிரண்டை தாண்டி விட்டது. அடுக்கு மாடி குடியிறுப்பில் கொஞ்சம் கொஞ்சமாக விளக்குகள் மங்கல் ஆக தொடங்கின. கடந்த நான்கு நாட்களாக கணேசனை சளியும் ஜலதோஷமும் விடுவதாய் இல்லை. மறுபடியும் ஒரு முறை உள்ளே சென்று பார்த்தான், மகளும், மனைவியும் நன்றாக உறங்கி கொன்டிருந்தனர். மறுபடியும் சோபாவில் வந்து உட்கார்ந்தான். தூக்கம் வரவில்லை. நாற்பதை கடந்து விட்டாலே இது ஒரு இம்சை தான். கணேசன் ஒரு தனியார் ஐ டி நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தான். உலகெங்கும் பரவி இருந்தது அந்த நிறுவனம். வேலை ஒன்றும் அவ்வளவாக கடினம் இல்லை. இந்த 27 வருட அனுபவத்த்தால் எதுவும் புதியதாக தோன்றவில்லை.
புதியதாக ஏதாவது செய்யவேண்டும் என்ட்ற உந்துதல் பல நாட்களாக கணேசனை தொந்தரவு செய்து கொண்டுருந்தது. அதே நேரத்தில் ஏன் செய்ய வேண்டும் என்ற கேள்வியும் விடாமல் துரத்தி கொண்டிருக்கிறது. இந்த எண்ண அலைச்சல் தான் தூக்கமின்மைக்கு காரணம்.
ஏன் எல்லோரும் எப்போதும் ஏதாவது செய்து கொண்டிருக்கின்றனர்.? எதை நோக்கி இந்த ஓட்டம். ஒருநாளில் எல்லாம் முடியதான் போகிறது. யார் கூட வருவார்கள்.? இதை நண்பனிடம் கேட்ட போது 'இவரு பெரிய மயிறு, மூடினு வேலையப்பார் "என்றான்.
ஆனால் காசில்லாமல் ஒரு வேலையும் நடக்காது. அதனால் "மூடிக்கொண்டு வேலையை " பார்க்கத்தான் வேண்டியிருக்கிறது. என்னதான் வியாக்கியானம் பேசினாலும் காசு இங்கு வேண்டி இருக்கிறது. எவ்வளவு வேண்டும் என்பது தான் மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. அடுத்தவனை அடித்து பிடுங்குவது இந்த கேள்விக்கு விடை தெரியாத காரணத்தாலா? இந்த கேள்வி எல்லோருக்கும் இருக்குமோ? இருக்கும். பதிலை தேடுவதை விட சில சமயம் கேள்வியை மறப்பது சுலபம். காமமும், குடியும், கோட்டும், டையும், நுனி நாக்கு ஆங்கிலமும், பள பளகும் ஷூஉம், எல்லாம் இந்த கேள்வியை மறக்க முயலும் யுத்திகள்.
இந்த ஓட்டம் இன்று நேற்று தொடங்கியதல்ல.
கடவுள் தேடல், பஜனை, பாட்டு, பக்தி எல்லாம் இந்த வகை தான்.ஓட்டம் முடிந்தால் நான் இங்கு இருக்க மாட்டேன். நான் இங்கு இருக்கும்போது ஓட்டம் முடியாது.
மணி இப்போது ஒன்றாகிவிட்டது. காலையில் அவசர மீட்டிங் ஒன்றிற்கு தயாராக வேண்டும். டை, ஷூ இத்யாதி யோடு மறுபடியும் போரிட வேண்டும். "மூடினு வேலையைப்பார் " என்பது தெய்வ வாக்காய் ஒலித்தது.
முற்றும்.
Comments
Post a Comment