அனுபவம்
அனுபவம்
சிவம் எம் சிந்தையில் நிறைந்ததது
நிறைந்த சிந்தனை நித்திரை குறைத்தது
கனவிலே சிவனை கண்டேன், காட்சி
நினைவில் உறையக் கண்டேன்
சிவனடியார் சிலரையும் கண்டேன்,
லிங்கம் கனவில் தோன்ற கண்டேன்
பார்வதி, முருகன், கணபதி என
குடும்பம் முழுவதும் கூடவே கண்டேன்
சூசகமாய் சொன்னாய் செய்தி,
சொன்ன செய்தி விளங்கவில்லை,
இதுவரை இப்படி நிகழ்ந்ததில்லை, .
எவரையும் கேட்க தோன்றவில்லை
அமைதியின் அனுபவம் தொடர்ந்தது
நெஞ்சில் நின்ற அச்சம் அகன்றது
செய்யும் செயலில் கவனம் வளர்ந்தது
எதிர்பார்பற்ற எண்ணம் வளர்ந்தது
கருவமும் கொஞ்சம் கூட வளர்ந்தது
பயணம் இன்னும் தொடங்கவில்லை
என் மனம் இதனை அறியவில்லை
கூச்சல், குழப்பம் அடங்கவில்லை
விளம்பரம் இன்னும் வீழவில்லை
தேடல் இங்கே எல்லோர்க்கும் உண்டு
தேவைகேற்ற தேடுதல் இல்லை
தேவை எதுவென்று தெரியவில்லை
ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவரும்
படிப்பும், பட்டமும், வீடும், வாசலும்
பொன்னும், பொருளும், ஆடலும் பாடலும்
ஞானமும், கல்வியும், சகா வாழ்வும்
தேடும் வகைகளில் சில வகை
தேடி தேடி சலித்த பின்பும், தேடுதல்
முடிவற்றதென்று அறிந்த பின்பும்
தேடும் வேலை தொடர்ந்தே நடக்கும்
தேடிச் சலித்ததில் நானும் ஒருவன்
இன்னும் ஓடிக் கொண்டிருப்பவன்..
பேரருள் தந்த குருவின் திருவருள்
தேடும் வழியில் தெளிவைத் தந்தது
தேடுதல் பற்றிய கேள்வி எழுந்தது
தேடுதல் முதல் முறை உள்ளே நடந்தது
இது இருட்டில் குருடனின் தேடும் முயற்சி
முயற்சியினால் வந்தது அயர்ச்சி
முயன்ற பலரை கேட்டு பார்த்தேன்
கேள்வி ஒன்று பதில் பல,
சும்மா இரு என்றனர் சிலர்,
தியானம் பழகச் சொன்னவர் சிலர்,
என் வழி தனி வழி என்றனர் சிலர்,
யோகம் செய் என்றனர் சிலர்,
யாகம் செய் என்றனர் சிலர்,
எல்லாம் விடு, இமயம் செல் என்றனர் சிலர்
மனிதன் புத்தி வாங்கி விற்கும் சந்தை
புத்தி, முயற்சி இன்றி அடையும் யுத்தி
குறைந்த விலையில் கடவுளை வாங்கும்
முயற்சியில் முயன்றேன்.
தியானம் செய்தேன், யோகம் செய்தேன்
முடிந்த யாவையும் முயன்று பார்த்தேன்
உள்ளே குருவாய் இறைவன் சிரித்தான்
Comments
Post a Comment