Posts

Showing posts from 2021

My Abstracts collection Acrylic on Canvas

Image

First day of a new born baby. Baby sleeping on a craddle besides mother. Something which goes in childs mind.... Just an imagination

முத்தமிட ஆசை,அம்மா! என்று சத்தமிட ஆசை. எட்டித் தொட்டு விட ஆசை. தோளில் தொற்றிக்கொள்ள ஆசை தொட்டில் விட்டு இறங்கிவிட ஆசை மருத்துவச்சி தலையில் குட்டு விட ஆசை தூக்கி கொஞ்ச வரும் சுற்றம் விலகி நிற்க ஆசை அப்பாவின் கொஞ்சல் எல்லாம் அள்ளிக்கொள்ள ஆசை. என் இஷ்டம் போல் பெயர் இட்டுக்கொள்ள ஆசை ஆணா பெண்ணா அலியா என்றறிந்து கொள்ள ஆசை காதில் விழும் சத்தம் புரிந்து கொள்ள ஆசை கருவறையில் பெற்ற சுகம் இனி தொடரும் என ஆசை. .....

6 October 21

ஆதி அந்தம் இல்லா அருட்கடல் அண்ணாமலை எனும் அக்னிப் பெருங்கடல் தேவார மூர்த்தி நீ, திருவாசகத் தேன் நீ அம்பலவாணன் நீ, அருட்பெரும் ஜோதி நீ அழைக்கிறேன் உன்னை அருள் செய்ய வேண்டும் துதிக்கிறேன் உன்னை துணை செய்ய வேண்டும்  ஆடிக் களித்தோம், வெறுமையில் கூடிக் களித்தோம் அழகின்பின் ஓடிக் களைத்தோம், வீணே உறங்கிக் களைத்தோம் ஓயாமல் பேசிக் களைத்தோம், வாழ்கை தொலைத்தோம் சிவன் என்னை காண வேண்டும், சீக்கிரம் காக்க வேண்டும்  வேள்வி பூஜை எல்லாம் வெறும் வெட்டி வேலை ஆச்சு ஊராற்கு காட்டும் உத்தம வேடம் ஆச்சு சில்லறை செலவிட்டு சிவன் வாங்கும் வேலை ஆச்சு சிவனை அறியவில்லை போதை இன்னும் தெளியவில்லை  மனது என்பது புரியவில்லை, மருந்தேதும் தெரியவில்லை பெண்ணாசை புரியவில்லை, புதிதாய் ஏதும் நடக்கவில்லை சாக்கடையில் உழன்றேன், சந்தனம் போல் அணிந்தேன் சிவன் என்னை அடையவேண்டும், சிந்தனை தெளியவேண்டும் ஊசி முனை அளவு போதும் உன்னருள் உள்ளம் தெளிய இவ்வளவு போதும் திருவருள் உடல் என்னும் தடை உடைய தேவை சிவன் அருள். என்னை இழக்க வேண்டும், உன்னில் கலக்க வேண்டும். உடல் செய்யும் பயணம் இனி இப்படித் தொடர வேண்டும். அன்பே சிவம்...

5th Oct 21

கண்ணே உன் பார்வ பட்டு நான் கவி ஆனேன். சாமி நெஞ்சில் வந்தது போல் மனசெல்லாம் பூவானேன். நெசமா இது? தெரியலையே! கிள்ளிப் பார்த்தேன் வலிக்கலியே முகம் பார்க்கும் கண்ணாடி முழுசும் இப்போ என் முகம்தான். இப்போதெல்லாம் சந்தோசம்தான், எப்போதும் உன் நேசம்தான். அடி,ஆனேன் நான் பைத்தியமா.. இது ஆள கொல்லும் வைத்தியமா? அடுத்தது என்ன தெரியலையே அவசரம் இன்னும் அடேங்கலியே போதை இன்னும் தெளியலியே என் வாழ்க்கைக்கு நீதான் வழித் தடமா? உன் பார்வை என்ன தேர் வடமா?

பாஞ்சலி -Paanchali

Image
துரியோதனன் - சகுனி ஐவரை வெல்ல வேண்டும்,மாமா! அவர் குலம் அழிக்க வேண்டும் அதற்கு ஒரு வழி சொல் என்றான். போரிடத் தேவையில்லை, மருமகனே! அவர்க்கு சூழ்சி வலை விரிப்பேன் பகடைக்கு வீழ வைப்பேன், அவர் தேவியை உனக்கு பரிசளிப்பேன்! சகுனியும் கொக்கரித்தான் கௌரவர் குலத்திற்கு குழி பறித்தான். துரியோதனன் - திருதராஷ்டிரன் மன்னனே, என் தந்தையே கேள்.  ஐவரை சூதுக்கு அழைப்போம். அழைப்பிதழ் அனுப்பி வைப்போம். அவர் வரவுக்கு காத்திருப்போம். சூதிலே தோற்கடிப்போம். அவர் குல வதுவை நாம் நோகடிப்போம். மன்னனின் ஆணைதேவை. மற்றதெல்லாம் மாமன் வேலை. நாங்கள் முடிவெடுத்து விட்டோம். இனி முடிவில் மாற்றமில்லை. பெரியவர், ஆசான், சான்றோர், எவரையும் கேட்பதற்கு இல்லை. மன்னனின் ஆணை தேவை.  மறுப்பை ஏற்க இயலாதென்றான். திருதராஷ்டிரன் சூதெதற்க்கு ஆட வேண்டும்? சூழ்சி ஏன் செய்ய வேண்டும்? அமைதி ஏன் குலைக்க வேண்டும்? அழிவை ஏன் தேட வேண்டும்? பாண்டவர்க்கு நாம் ஏன் இந்த பாவத்தைச் செய்ய வேண்டும்? பேரிடர் நிகழும் முன்னே பிள்ளையை காக்க வேண்டும். பாவி சகுனியின் பிடியில் இருந்து சந்ததி மீள வேண்டும். ஆயிரம் கேள்விகள்,ஆசைகள் எழுந்தன மனத...

Haiku Tamil

Image

Hindi Poem Series

Image

Hindi Poem Series

Image

Hindi Poem Series

Image

abstracts

Image

abstract series

Image

Abstract Series

Image

abstracts collection

Image

ஹரே கிருஷ்ணா

Image

ஹைக்கூ

தேடல் நான், கடவுள் தொலைத்த பொம்மை அவனுக்கு தேடவும் நேரம் இல்லை. வரம்  அம்மாவின் முலை கடித்து அவள் மார்பில் முகம் புதைத்து  படுக்கையை தினம் நனைத்து  ஆயிரம் ஆயிரம் அடம் பிடித்து அவள் தூக்கம் தினம் கெடுத்து வளர்ந்தது வரம் தானே? காலம்  அப்பாவின் அடி வாங்கி, அம்மாவின் வசை வாங்கி, அண்ணனின் உடை வாங்கி, கணக்கில் கடன் வாங்கி, கழிந்த அற்புதக் காலம் வலி  நண்பர்கள் கூட்டம் நக்கல் செய்ய, முதல் காதலை கொஞ்சம் முயற்சி செய்த  முதல் தோல்வியின் வலி முதுமை வரை.

நினைவு

Image

காதல்

கண்ணான கற்பகமே, நான் கண்டெடுத்த அற்புதமே, ஒத்த ஜடை ஓவியமே நான் தெனம் ரசித்த காவியமே, கை பிடித்து நீ நடக்க, நம்பிக்கை நான் கொடுக்க, காற்றில் நம் பேச்சு சலசலக்க, நேரம் மறந்து கலந்து இருந்த, காலங்கள் பற்றி என்ன சொல்ல. காலங்களுக்கு நரை விழுந்து, கண்களிலே திரை விழுந்து, முதுகு தண்டு முன் வளைந்து, மூப்படைந்து முடங்கினாலும். முதல் காதல் முடிவதில்லை. நினைவுக்கு வயதில்லை. ஆசைக்கு அளவில்லை. #love #kadhal #Ninaivugal

யோசி

21 April "நமக்கு நம்மை தெரியவில்லை  மொழி, இலக்கியம் புரியவில்லை பழமையை புதுமை போல் பேசி திரிந்தோம். கேள்விகள் கேட்டல் மிகவும் தொல்லை  உண்மையை சந்திக்க தைரியம் இல்லை  யோசித்தலை பற்றி பின்பு யோசிப்போம்  அறியாமை காற்றை இன்று  சுவாசிதோம். மாற்றம் தேவை என மனது சொல்லுது  அலுப்புடன் கொஞ்சம் மாற்றி யோசிப்போம்   சார்ந்து வாழ்தல் மனித இயல்பு  தனித்து வாழ்தல் தவளை வாழ்வு  அறிவு, அனுபவம், ஞானம் என்பது  மொழி, இனம், தேசம் கடந்தது. குண்டு சட்டி குதிரை ஓட்டம்,  பயனில்லை இனிமேல் பாதை மாற்று  மனதை, புத்தியை கொஞ்சம் திறப்போம்  புதிய மொழிகள், கலைகள் கற்போம்  தாய் மொழியில் பல புதுமைகள் செய்வோம்  ஜாடியில் உள்ள ஊறுகாய் அல்ல நாம்,  மனிதர்கள், மலர்ந்திட பிறந்தவர்கள். மாற்றம் என்பதை மிதமாய் செய்வோம்  ...

கண்மூடி

கண் மூடி உள்ளே சென்று  விழி நடுவே உணர்வை நிறுத்தி சுவாசத்தை சீராக்கி பழகும் வித்தை. இடைஞ்சல்கள் இதிலும் உண்டு  வழி முறை பலவும் உண்டு  வழி பற்றி கவலை வேண்டாம்  பயணத்தை மேற்கொள்வோம் நாம் பயம் கொள்ள தேவையில்லை  படைத்தவன் பார்த்துக் கொள்வான்.  தூக்கமும் ஒரு நாள் மறையும்.  மனதின் ஆழம் தெரியும். உடலையும் தாண்டி, மலை, செடி  கடல், வெளி முழுதும் பரவி நிற்க,  உயிர் எல்லாம் ஒன்றாய் விளங்கும் அனுபவம் அரிதாய் அமையும்.  மாற்றம் மிக மெதுவாய் நிகழும்  தனியே விழித்திருக்கும் போதும்  கூட்டமாய் அலையும்போதும்  செயல் எதுவும் செய்யும் போதும்  மனைவி, கணவன், மக்கள், பெற்றோர்  மற்ற சுற்றங்கள் சுற்றும் போதும்  விலகி நிற்க கற்க  வேண்டும். விலகுதல் விலக்குதல் இல்லை. சிந்திக்க தொடங்குவோம் நாம்..  ....தொடரும்

கொரோனா

Image

தேர்தல் வரை

வெள்ளை வேட்டி,  வெள்ளை சட்டை,  வெறும் பேச்சு தினந்தோரும். பொய்யே பொழப்பாச்சு, நல்லா படிக்கவில்ல, வேறேதும்  கத்துக்கல,   பொழுத வீணா கழிச்சாச்சு  அண்ணன் பேச்சை கேட்டுக்  கேட்டு  அரை டவுசர் கழண்டு போச்சு  கட்அவுட்டுக்கு பால் ஊத்தி  கை காசு கரைஞ்சி போச்சு  தன்மான தமிழன் வேஷம்  கச்சிதமா செட் ஆச்சு  தேர்தல் வரும் வரும் வரையில்  இதுவே என் பொழப்பாச்சு.

முடிவு

Image

வனம்

Image

குருடன் தேசம்

Image

சிங்கம்

Image

கர்ணன்

சிறுமி செய்த தவறு  குழந்தை அதனின் விளைவு  ஆற்றோடு சென்ற  அவலம்  சூரியன் மறந்த கிரணம்  கர்ணன், குந்தியின் புத்திரன்  துரியனின் மித்திரன்  அவன் , மாசு படிந்த வைரம்  தீயவர் கை அடைந்த செல்வம்  அவன் நட்புக்கு இலக்கணம்  ஆம், கூடா நட்புக்கு. சூரியன் பெற்ற மக்குப் பிள்ளை  தன் பலம் மறந்த தற்குறிப் பிள்ளை. சாபம் அனைத்தும் கேட்டுப் பெற்றவன்  அழிவை அழைத்து அழகு பார்த்தவன்  தேரோட்டி வளர்த்த தத்துப் பிள்ளை ........

ஜனகன்

Image

Poem அண்ணன்

Image