Posts

Showing posts from 2023

3D

The human experience is rooted in circumstances and reactions to those circumstances. Reactions to circumstances evolve over time, leading to changes in one's experience. This experience is inherently individualistic, as both positive and negative experiences, along with their outcomes, have their own justifications. Deep within us, there's a tendency to rationalize everything we do. Each of us possesses an unwavering self-perception. Whether one is a prime minister or a street-side beggar, this steadfast self-image exists within everyone. This self-image manifests as reactions, which vary in intensity based on circumstances and experiences. Aspects such as power, money, social status, success, fame, losses, and difficulties all contribute to shaping this inner self-image. This self-image continuously evolves, diminishes, and transforms until one's passing, which I believe is referred to as the ego. Various teachings emphasize the importance of shedding this ego. The questi...

வியாபாரம்

செல் போன் மணி கேட்டு எடுத்து பேசிய போது மறு முனையில் ஒரு பெண்மணி மிகவும் அமைதியான குரலில் தெளிவாக தன்னை அறிமுகம் செய்து கொண்ட பிறகு " ஜி, நீங்க போன வாரம் நீங்க நம்ம சென்டர்ல சத்சங்கதுக்கு வந்தீங்க இல்ல, நம்ம குருஜி அடுத்த வாரம் நம்ம ஊருக்கு வரார், நீங்க தவறாம நம்ம சென்டர் மெம்பெர்ஸ் கூட குருஜிய பாக்க போகும் போது ஜாயின் பண்ணிக்கணும் " என்று சொன்ன போது, இந்த பெண்மணி இதே விஷயத்திற்காக தன்னை தொடர்பு கொள்ளும் மூன்றாவது நபர் என்று சொல்லத் தோன்றியது. நாகரீகம் கருதி வேரெதுவும் சொல்லாமல் "சரி "என்று சொல்லி இணைப்பை துண்டித்தான் நாராயணன்.கடந்த மூன்று மாதங்களாக இந்த குழுவுடன் இணைந்து இருந்தான். நண்பன் ஒருவனால் அறிமுகப்படுத்தப் பட்டு ஒரு சில மூச்சு பயிற்சிகள் கற்றுக்கொண்டாகி விட்டது. ஒவ்வொரு ஞாயிரும் இந்த குழு கூடி இந்த பயிற்சியை தொடர்ந்து கொண்டு இருந்தனர். நடு நடுவே போன் செய்து "பயிற்சி கன்டினியு செய்யறீங்களா " என்று மாஸ்டர் என்று அழைக்கப்பட்ட நபர் விசாரித்துக் கொண்டு இருந்தார். "இந்த வாரம் புது பேட்ச் ஒன்னு ஆரம்பிக்கிறோம், உங்க நண்பர்கள் யாரையாவது சேர்த்து விடுங...

🙏🙏🙏

குனிந்து கண்ணாடியைப் பார்த்து புருவ மத்தியில் சந்தனப் பொட்டு வைத்து நிமிர்ந்த போது முன் நெற்றி நரை மறுபடியும் கவனத்தை ஈர்த்தது. வீட்டை விட்டு ஆசிரமம் வந்து சேர்ந்து பதினைந்து வருடங்களுக்கு மேல் ஆயிற்று. கல்லூரி வயதில் தாடி வைத்த சாமியாரின் பேச்சில் ஈர்க்கப்பட்டு, அவரை தேடித் தேடி பேசிய பேச்செல்லாம் கேட்டு மிகப் பெரிய போராட்டதிற்குப் பிறகு ஆசிரமம் சேர்ந்து துறவறம் எடுத்துகொண்டாகி விட்டது. மழித்த தலையும், காவி உடையும், மூச்சு பயிற்சியும், நல்ல உணவும் பழக்கப்பட்டு விட்டது. இது வேறு ஒரு விதமான வேஷம். ஆங்கிலம் பேசி, அலுவலகம் சென்றோ, வியாபாரம் செய்தோ யாருக்காகவோ வாழ்வது போல் இதுவும் ஒரு வேஷம். கடவுளைத் தேடி தொடங்கிய பயணம், வேறு எதையோ செய்வதில் கழிந்தது. இயல்பாக இருப்பது என்பது மிகவும் கடினமாக இருந்தது.காவி உடையில் எப்போதும் அமைதியாக இருப்பது போல் சிரித்துக் கொண்டு இருக்க வேண்டும். கோபம் தவிற்க பழக வேண்டும். பிரம்மச்சர்யம், கிருஹஸ்தம், வானப்ரஸ்தம், சன்யாசம் என்று வாழ்கையை ஏன் பிரித்தனர்? நான் மட்டும் ஏன் முதல் நிலையிலேயே இத்தனை நாள்?.. சாவுதான் சன்யாசமா? அதுவரையில் இந்த வேஷமும், சந்தன பொ...

பேரொளி

"செம்மை நலம் அறியாத சிதடரொடுந் திரிவேனை மும்மை மலம் அறுவித்து முதலாய முதல்வன்தான் நம்மையும் ஓர் பொருளாக்கி நாய் சிவிகை ஏற்றுவித்த அம்மை எனக்கு அருளிய ஆறு ஆர் பெறுவார் அச்சோவே...." கடைசி திருவாசக பாடல் படித்து முடித்து புத்தகத்தை மூடிய போது ஏதோ  ஏக்கமா, ஏதோ புரிந்து விட்டது போன்ற சந்தோசமா என்ற இனம் புரியாத ஒரு உணர்வு சூழ்ந்தது.  பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எங்கோ ஒரு முப்பத்தி இரண்டு வயது இளைஞன் அதிசயப்பட்டது ஆச்சர்யம் அளித்தது.  "முதலாய முதல்வன் " என்று எப்படி அறிந்து கொண்டான்? தன்னை "நாய் " என ஏன் அழைத்த்துக் கொண்டான்?  பாண்டிய மன்னனின் அமைச்சன் எதை வேண்டுமானலும் அடைந்து இருக்கலாம். கை கட்டி சேவகம் செய்ய ஆயிரம் பேர் இருக்க, கை தட்டி அழைத்தால் ஆயிரம் பெண்கள் இருக்க, அதை விடுத்து "முதலாய முதல்வன்" என்று அந்த பேரொளியை ஏன் தேடிக் கொண்டு இருந்தான் என்று புரியவில்லை. கம்ப்யூட்டரும், செல் போனும், சினிமாவும் இருந்து இருந்தால், வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை அணிந்து வேறு எந்த முதல்வனையாவது பாடி இருப்பானோ?  குதிரை வாங்க சென்றவனை கோவில் கட்டச் சொன்னது எது? சிவன...

ஆட்டம்

"வெற்றி "  இந்த மூன்றெழுத்துதான் உலகத்தின் அனைத்து நிகழ்வுகளுக்கும் காரணம். யார் யாருக்கு சமம் என்பதை விட யார் யாரை விட உயர்ந்தவர் என்பதில்தான் மொத்த மனித குலமும் கவனம் செலுத்திக் கொண்டு இருக்கிறது . வெற்றி என்பது பலவிதம். "எனக்கு சாமி தரிசனம் ரொம்ப நல்லா கெடச்சுது " என்று சொல்லும் போது தனக்கு தரிசனம் கிடைத்த சந்தோஷத்துடடன் எதிரில் உள்ளவனுக்கு கிடைக்க வில்லை என்ற நூலிழை போன்ற ஒரு எண்ணமும் ஒரு வகை வெற்றிதான். இது இன்று நேற்று சொல்லிக் கொடுக்கப்பட்டது அல்ல..மனிதன் மறக்காமல்  இருக்கும் மிருக குணம். வெற்றி நோக்கி ஓடு, இல்லை என்றால் ஓடுவது போல் நடி. கூட்டதுடன் சேர்ந்து "வாழ்க " சொல். வெற்றி பெற்றவர்களுடன் சேர்ந்து இரு. இந்த இலக்கணப்படிதான் எல்லாம் நடந்து கொண்டு இருந்தன. வெற்றி பெற்றவன் வாழ்கை பூதக் கண்ணாடி கொண்டு ஆராயப்படும். அனைத்து அசைவுகளும் விமர்சிக்கப்படும். எப்போது கீழே விழுவான் என காத்து இருக்கும். விழுந்தவுடன் விலகி ஓடும். கை தட்டி " எனக்கு அப்பவே தெரியும், பெரிய பிராடு பா அவன் ",  "வாய்ல இருந்து லிங்கம் எடுத்தப்பவே நெனைசேன் ",  ...

"...............பரசுராமனாகிய நான் "

கடைசியாக ஒரு முறை கண்ணாடி முன் நின்று பார்த்து கொண்டான் பரசுராமன். வெள்ளை வேட்டியும், வெள்ளை சட்டையும் கருப்பு நிற தோல் நிறத்திற்கு கச்சிதமாக இருந்தது. கொஞ்சம் நெருங்கி கண்ணாடி முன் சென்று மீசையை உற்றுப் பார்த்து இரண்டு பக்கமும் சரியாக உள்ளதா என பார்த்துக் கொண்டான்.  ஒரு ஓரமாக இருந்து ஒற்றை வெள்ளை முடியை சாயம் பூசி சரி செய்ய வேண்டும் என மனதில் ஓடியது. கட்டை விரல் அளவு விபூதி எடுத்து நெற்றியில் இட்டுக் கொண்டபின், கொஞ்சம் ஜவ்வாது எடுத்து தண்ணீரில் நனைத்து  காதோரமும், கொஞ்சம் கழுதிலும் தடவிக் கொண்டான்.  "பரசுராமன் என்னும் நான் " என்னும் வாசகம் எப்போதும் மனதில் ஓடிக் கொண்டு இருந்தது.  இந்த இடத்திற்கு வருவதற்கு நிறைய அடி வாங்க வேண்டி இருந்தது.  தனக்கு என்று ஒரு இடமும், தன்னை சுற்றி ஒரு கூட்டமும் எப்போதும் இருக்கும்படி பார்த்துக் கொள்வது மிகவும் கடினம். "தமிழ்", இந்த மொழியின் வலிமையை, அது ஏற்படுத்தும் தாக்கத்தை, அது எப்படி உணர்ச்சி வசப்பட வைக்கும் என்பதை இளம் வயதிலேயே நன்கு அறிந்தது மிகப் பெரிய பலமாக அமைந்தது. உணர்ச்சி வசப்படும் கூட்டம் நன்கு யோசிக்காது எனற தந்திரம் ம...

அடியேன்

இந்த பொங்கல் வந்தால் ஐம்பத்து ஐந்து வயது கடந்து விடும். கொடிக் கம்பத்தின் கீழ் சற்று இளைப்பாரலாம் என உட்காந்தவருக்கு வயதின் ஞாபகம் ஏன் சட்டென்று வந்தது என தெரியவில்லை. முன் நெற்றி வியர்வையை துடைத்தபடியே யோசித்த போது பதினைந்து,பதினாரு வயதில் அப்பாவுடன் முதலில்கட்சி கூட்டத்திற்கு போனது நினைவு வந்தது.. தலைவர், தலைவர் என்று அப்பா ஓடியது, கொடி கட்டவும், ஆள் சேர்க்கவும் அலைந்ததும் நேற்று போல் உள்ளது. அப்பாவிற்கு பிறகு இவர். தலைவரின் மொழிப் பற்று , தலைவரின் பேச்சு, சொன்ன உண்மையான பொய்கள் அனைத்தும் கவர்ந்தது. மாணவர் அணி, இளைஞர் அணி என்று படிப் படியாக முன்னேறியதில் படிப்பு பாழானது..தலைவர் முன்னிலையில் திருமணமும் , பிள்ளைக்கு தலைவன் பெயர் வைத்ததும் தவிர வேறு ஒன்றும் பெரிதாய் நடக்கவில்லை . கூட்டதுடன் ஓடி ஓடி, ஒன்றும் புரியாமல் கோஷமிட்டு தலைவன் அழைப்பை ஏற்று போராடி அடிவாங்கியதுதான் மாறி மாறி நடந்தது . இன்னும் ஒரு கவுன்சிலர் பதவி கூட பிடிக்க முடியவில்லை. இது ஒரு மாதிரியான போதை, புலி மேல் செய்யும் சவாரி. நேரம் ஆக ஆக மீள்வது கடினம்.கரை வேட்டியும் அது தரும் போதையும் மற்றவர்களுக்கு புரியாது.  வ...

தேடல் - Micro Story

"ப்ளீஸ், ஸ்டார்ட் தி மெடிடேஷன்" என்று எதிரில் உட்கார்ந்து இருந்த பெரியவர் சொன்னதும், கண் மூடி உட்கார்ந்து இருந்த நான் இதய மத்தியில் உள்ள தெய்வீக ஒளியை தேட ஆரம்பித்தேன். மூன்று மணி நேரம் கிரிக்கெட் போட்டியும், சினிமாவும் முழு கவனத்தோடு பார்க்க முடிகிறது. ஆனால் ஒரு முப்பது நிமிடம் கண் மூடி உட்கார இயலவில்லை. தியானம் ஆரம்பித்த அடுத்த வினாடி எப்போதும் இல்லாத எண்ண அலைகள் எங்கிருந்தோ வந்து தாக்கத் தொடங்கின. காலிங் பெல் சத்தமும், வீட்டில் உள்ளவர்கள் பேச்சு சத்தமும் தியானம் செய்ய உட்காரும் போதுதான் மிக நன்றாக கேட்கிறது. இந்த எண்ண அலைகளுக்கு நடுவே தெய்வீக ஒளியை தேடுவது மிகவும் கடினமாக இருந்தது. அடுத்த முப்பது நிமிடங்கள் எப்போது முடியும் என்ற தவிப்பும், தெய்வீக ஒளி தெரிந்த பின் என்ன செய்வது என்கிற நினைப்பும் ஒரு வித பதட்டதை ஏற்படுத்தின. கண் மூடி தியானம் செய்வதும் ஏதோ ஒன்றை அடையும் நோக்குடன்தானோ? இது கோவிலுக்கு செல்லாமல் செய்யும் பண்ட மாற்று வியாபாரமா? கண் மூடி உட்கார்ந்ததில் முப்பது நிமிடங்கள் போனதே தெரியவில்லை. "தட்ஸ் ஆல் " என்ற பெரியவரின் குரல் கேட்டு கண் திறந்து போது.. ...

பயணம்

கிளம்ப வேண்டிய நேரம் வந்து விட்டது. எழுபத்தி ஐந்து வருடமாக ஒரே இடத்தில் இருந்தாகி விட்டது. இந்த வீடு இரண்டு வருடமாக கொஞ்சம் கொஞ்சமாக சிதிலம் அடைந்து கொண்டு இருந்தது. இன்னும் சற்று நேரத்தில் கிளம்ப வேண்டும் என்பது கட்டளை..கிளம்ப கடந்த இரண்டு நாட்களாக ஆயத்தம் செய்தாகி விட்டது. இரவு 11.58 க்கும் 11.59 க்கும் இடைப் பட்ட நேரத்தில் விலகி 6 அடி உயரத்தில் மிதந்து கொண்டு இருந்த போது, 75 வயது சர்தார்ஜியின் மனைவியும்,மகனும் பெரும் குரல் எடுத்து அழுது கொண்டு இருந்தனர்.. அக்கம் பக்கத்தில் உள்ள பிளாட்களில் இருந்தவர்கள் வந்து "க்யா ஹுவா ", கப் ஹுவா என்று விஜாரித்துக் கொண்டு இருந்தனர். முன் வழுக்கை தலையோடு ஸ்வெட்டர் அணிந்த ஒரு முதியவர் " வாட் ஹேப்பன்ட், ஷுட் வி கால் டாக்டர் " என்று ஆங்கிலத்தில் கேட்டுக் கொண்டு இருந்தார். மெல்ல, மெல்ல செல் போன்களில் செய்தி தெரிவிக்கப் பட்டது. மிதந்து கொண்டு இருந்த அது நடப்பது அத்தனையும் கவனித்துக் கொண்டு இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக உறவினர் வர தொடங்கினர்.. உடலை ஹாலில் கிடத்தி, மகன் பக்கத்தில் உட்கார்ந்து கொள்ள, அக்கம் பக்கத்தில் உள்ளவர்களால் சூடான ...

கேள்வி

மரணத்திற்கு பிறகு என்ன நடக்கும் என்பதை உயிருடன் இருக்கும் தாடி சாமியார் விளக்கி சொல்லிகொண்டு இருக்க, உயிருடன் இருக்கும் கேள்வி கேட்டவரும் நானும் ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டு இருக்கிறோம்..இந்த கேள்விதான் உலகத்தில் மிக அதிகமாக கேட்கப்பட்ட கேள்வியாக இருக்கும். ஒவ்வொரு முறை பதில் பெற்ற பின்பும் பெரிதாய் ஒன்றும் மாறவில்லை.. கூட்டம் முடிந்து சமோசா சாப்பிட்டு வீட்டிற்கு சென்றதைத் தவிர. இது ஒரு விதமான ஏமாற்றும் வேலை. எந்த பதிலும் சரியானது இல்லை என கேட்பவருக்கும், பதில் சொல்லுபவருக்கும் நிச்சம் தெரியும். இதை விட எப்பொழுது மரணம் நிகழும் என்பதை துல்லியமாக அறிய முடியுமா என கேள்வி கேட்கலாம்.. அதற்கும் ஏதாவது பதில் வைத்திருப்பார் சாமியார்...இந்த மாதிரி கேள்விகளுக்கு பதில் கிடைத்து விட்டாலும் என்ன செய்து விடுவார்கள் என தெரியவில்லை...

நிருபன் - மைக்ரோ ஸ்டோரி

கதிரேசன் ஐந்தாவது முறையாக பைக்கை உதைத்து ஸ்டார்ட் செய்ய சோம்பல் முறித்து முனகியபடி பைக் ஸ்டார்ட் ஆனது.  அலுவலகம் விட்டு கிளம்பி அடுத்த ஐந்தாவது நிமிடம் சாலையோற டீக் கடையில் நிறுத்தி, "ஒரு கிளாசிக் மைல்டு குடுப்பா " என்று சொல்லி வாங்கி பற்ற வைத்து புகை இழுத்த போது மணி காலை 10.55.. இன்னும் நாற்பது நிமிடத்தில் காவி கட்சி அலுவலகம் சென்றடைய வேண்டும்.  அவசரத்தில் ஹெல்மெட் கழட்டாமலே சிகரெட் இழுத்துக் கொண்டு இருந்தது நினைவு வந்தது. ஹெல்மெட் போல இந்த பத்திரிகை நிருபர் வேலையும் இம்சைதான்.  கதிரேசனுக்கு திண்டிவனம் பக்கம் பூர்வீகம், அப்பா அரசு பணியில் ஓய்வு பெறுவதை நோக்கி ஓய்வு எடுத்துக் கொண்டு இருந்தார். கதிரேசன் வம்சத்தில் முதல் பட்டாதாரி. சின்ன வயது முதலே சினிமாவும், அரசியலும், தமிழும் நன்றாக அவனை செதுக்கி இருந்தன. திண்டிவனம் அப்படி ஒன்றும் பரபரப்பான இடமும் இல்லை.  அரசினர் கலை கல்லூரியில் பி ஏ தமிழ் படித்து, தனியார் செய்தி தொலைகாட்சி ஏற்படுதிய தாக்கத்தால் எப்படியாவது பத்திரிகை நிருபர் ஆக வேண்டும் என முடிவு செய்தான். தினமும் இரவு 9 மணிக்கு ஒரு வட இந்தியன் ஐந்து, ஆறு பேரை கூட்...

தனிமை..

காலிங் பெல் சத்தம் கேட்டு கண் விழித்த போது, " அம்மா, தண்ணி கேன் கொண்டு வந்து இருக்கேன் " என்று வழக்கமாக வரும் ஆள் நின்று கொண்டு இருந்தான்.  டிவியில் சீரியல் ஓடிக்கொண்டு இருந்தது, யாரோ யாரையோ பழி வாங்க வேண்டும் என்று ஒரு தடிமனான பெண் கண்களை உருட்டி வசனம் பேசிக்கொண்டு இருந்தாள்.. வந்த ஆள் தண்ணி கேன்களை வைத்துவிட்டு நகர்ந்த போது மணி காலை பதினொன்று.  டிபன் சாப்பிட்டு விட்டு ஓய்வு நாற்காலியில் உட்கார்ந்ததுதான் ஞாபகம் இருந்தது சாந்தா அம்மாவிற்கு... இந்த ஜனவரியோடு கணவன் இறந்து ஒரு வருடம் ஆகி விட்டது.   சிரோசிஸ் லிவர் வந்து நான்கு வருடம் அவஸ்தை பட்டு போன வருடம் , மூன்று நாள் நினைவு இழந்து அமைதியாக இறந்து போனார். அவர் இருந்த வரை அவரை கவனிப்பதிலேயே பாதி நேரம் போய் விடும்.  மனதில் ஒரு தைரியம் இருந்தது, வாழ்கையில் ஒரு பிடிப்பு இருந்தது. கடந்த ஒரு வருடமாக ஒரு வெறுமை சூழ்ந்து கொண்டது. இவள்தான் என் அம்மா. அப்பாவின் மறைவு அவளை மெல்ல அமைதியாக்கியது. பேச்சில் ஒரு கனிவும், பேரன், பேத்திகளின் நினைவும், கவலையும் அதிகமாகியது. தனக்கு என்று ஒருவர் இல்லை என்பது அவள் பேச்சில் தெரிந்தது. ...

கிருஷ்ணார்பணம்..

"இனிமேல் எல்லோரும் வழக்கம் போல எல்லா பண்டிகையும் செஞ்சிக்கலாம், எல்லா கோவிலுக்கும் போகலாம், மொதல்ல உங்க குல தேய்வ கோவிலுக்கு குடும்பதோட போய்ட்டு வாங்கோ.. நான் அப்ப கிளம்பறேன், சந்தோஷம்...!! " என்று சொல்லிவிட்டு சாஸ்திரிகள் கூட வந்த சிஷ்யர்களோடு தட்சினை இத்யாதிகளை எடுத்துக்கொண்டு கிளம்பி சென்று விட்டார்.  ஹாலில் வைத்து இருந்த படத்தில் அப்பா இன்னும் சிரித்துக்கொண்டு இருந்தார். அப்பா இறந்து ஒரு வருடம் முடிந்து செய்யவேண்டிய எல்லா காரியங்களையும் செய்து முடித்து விட்டு, கடைசியாக நவக்ராஹ ஹோமத்துடன் செய்து முடித்தாகிவிட்டது.  அப்பாவின் பயணம் இத்துடன் முடிந்ததாக சாஸ்திரிகள் சொல்கிறார். வேறு ஒரு இடத்தில் அந்த உயிர் ஜனனம் எடுத்து இருக்குமோ? இல்லை இன்னும் இங்கேயே இருக்குமோ? ஒரே குழப்பமாக இருந்தது. இனிமேல் ஒவ்வொரு அம்மாவாசை தினம்தான் அப்பாவின் நினைவு வருமோ? நாள் பட நாள் பட அதுவும் குறையுமோ...? சர்வம் கிருஷ்ணார்பணம்!  என்று சொல்லி சீக்கிரம் எள்ளும் தண்ணியும் விட்டு விட்டு வேறு வேலைக்கு ஓட நேருமோ?அடுத்தவர் மரணம் மெல்ல மறக்கும், துக்கம் மெல்லத் தொலையும்,  தன் மரணம் பற்றிய கவலை தோன்ற...