காத்திருத்தல்

This is about an husband waiting for his working wife to come home... 

அடியே என் இவளே 
இத்தனை நேரமாச்சு, இன்னும் 
ஏன் காணவில்ல.
பொறுத்து பொறுத்து இங்கே 
இன்னும் பொறுமையோடு காத்திருக்கேன்.
கடிகார முள் போல ஒரே 
இடத்தில் சுத்தி வரேன்.
பசிக்குது எனக்கும் இப்ப 
சீக்கிரம் வந்து சோறாக்கு.
கலயாணம் ஆயாச்சு, கால்கட்டா
கொழந்தை ஆச்சு. 
இப்ப என்னோட தேவையெல்லாம் 
சோறும் தூக்கமுந்தான். 
பெரியவங்க யாரும் இல்லை 
நம்மோட வந்து தங்க 
நமக்கும் பொறுமை இல்ல 
பெருசுகளை அனுசரிக்க.
நமக்கும் வயசாகும் 
அத நெனச்சா பயமாகும்.


அலுவலக வேலையால இவ்வளவு 
தாமதமா? 
வேலைய விடச்சொல்ல எனக்கும் 
ஆசைதான்.
மாசக் கடைசி வந்தா மறந்துருவேன் 
இத எல்லாம்.
கொடுக்கற எல்லா கடனும் 
கொறையாம வாங்கிபுட்டோம் 
வீடு நெறய பொருளாச்சு,  
வேடிக்கை பொழப்பாச்சு 
என்னோட  காதலி நீ இப்ப 
பொண்டாட்டி ஆயாச்சு 
காசு இருந்தா காதல் வரும் 
காசில்லாம காதல் சினிமாவில் 
மட்டும் வரும். 


இந்த புலம்பல்  எல்லாம் 
இன்னும் கொஞ்ச நேரந்தான் 
நீ வந்தா தெம்பு வரும்.
எல்லாம் மறந்து விடும் 
நாளை பற்றிய கனவு வரும் 
'எல்லாம் பாத்துக்கலாம்'
என்கின்ற எண்ணம் வரும் 


நாம் மட்டும் தனி இல்ல 
ஊருல முக்கால்வாசி இப்படிதான்.
இன்னும் கொஞ்ச நாளிலே 
எல்லாம் சரியாகும் 
அது வரைக்கும் இப்படிதான் 
கொஞ்சம் கஷ்டம்தான்.

Comments

Popular posts from this blog

5th Oct 21