படைத்தல்

 படைப்பு

எனக்கொரு கேள்வி என்னைப்ற்றி 
நான் ஏன் இவ்விதம், இந்நிறம், இக்குணம்
கலந்து பிறந்தேன்,
நான் ஏன் என் முன்னவர் குறைகளை
ஏற்று  பிறந்தேன்?
பாட்டன், மாமன் மற்றும் சிற்றப்பன் என
எல்லார் சாயலும் கலந்து பிறந்தேன்.
மரபணுவின் தாக்கம் என்றனர், மரபணு
என்பது
குறைகளையும் சுமக்கும் அணுவா?
மரபெனக்குஎதற்கு? நானோ புதியவன்,
பழைய குப்பைகள் எனக்கெதற்கு?
யுகம் யுகமாக நிகழும் செயலிது
யுகம் யுகமாக நடக்கும் தவறிது
படைப்பவனுக்கு அறிவுரை அவசியம்
படைப்பவனுக்கு  விடுமுரை அவசியம்
படைக்கும் முறையில் திருத்தம் அவசியம்
படைப்பு தொழிலில் மாற்றம் அவசியம்
உடலை செலுத்துவது உயிர் என்றெனில்,
உயிரின் ஊடே முன்வினை வருமெனில்
உயிரின் பதிப்பில் மாற்றம் அவசியம்
புதிய பதிப்பில் பழவினை அகலும்
புதிய உடலும் புதிய உயிர் பெரும்
புதிய உயிர்கள் புவில் வலம் வரும்.
உடலுடன் உயிரும் சேர்ந்தே அழியும்
மரபென்பதே இல்லாது போகும்
பழையன கழிதலும் புதியன புகுதலும்
படைப்பிலும்   நிகழும்.
------------

Comments

Popular posts from this blog

5th Oct 21