அனுபவம் சிவம் எம் சிந்தையில் நிறைந்ததது நிறைந்த சிந்தனை நித்திரை குறைத்தது கனவிலே சிவனை கண்டேன், காட்சி நினைவில் உறையக் கண்டேன் சிவனடியார் சிலரையும் கண்டேன், லிங்கம் கனவில் தோன்ற கண்டேன் பார்வதி, முருகன், கணபதி என குடும்பம் முழுவதும் கூடவே கண்டேன் சூசகமாய் சொன்னாய் செய்தி, சொன்ன செய்தி விளங்கவில்லை, இதுவரை இப்படி நிகழ்ந்ததில்லை, . எவரையும் கேட்க தோன்றவில்லை அமைதியின் அனுபவம் தொடர்ந்தது நெஞ்சில் நின்ற அச்சம் அகன்றது செய்யும் செயலில் கவனம் வளர்ந்தது எதிர்பார்பற்ற எண்ணம் வளர்ந்தது கருவமும் கொஞ்சம் கூட வளர்ந்தது பயணம் இன்னும் தொடங்கவில்லை என் மனம் இதனை அறியவில்லை கூச்சல், குழப்பம் அடங்கவில்லை விளம்பரம் இன்னும் வீழவில்லை தேடல் இங்கே எல்லோர்க்கும் உண்டு தேவைகேற்ற தேடுதல் இல்லை தேவை எதுவென்று தெரியவில்லை ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவரும் படிப்பும், பட்டமும், வீடும், வாசலும் பொன்னும், பொருளும், ஆடலும் ப...