Posts

Showing posts from December, 2019

குரங்கு

குரங்கு - முயற்சி செய்யா மனிதன். மனிதன்  முயற்சி செய்த குரங்கு.

பிரார்த்தனை, வேண்டுதல், விரதம் etc..

அமைதியான பண்டமாற்று  வியாபாரம்.  நான் இப்போது கோவிலுக்குள்ளே ! பூசை, பஜனை,  ஆட்டம்  பாட்டம், கூட்டம் எல்லாம்  ஆயிற்று - அடுத்தது வேண்டுதல். பிரசாதம், படையல் எல்லாம்  உள்ளே எடுத்துவை -இன்று  நான் விரதம்.  வேண்டுதல்  மந்திரம், தந்திரம் எல்லாம் உண்டு  பூசை, படையல் கூட உண்டு  சிறப்பு தரிசன சேவை உண்டு  மந்திரி, நடிகர், நடிகை வரவும் உண்டு  உண்டியல் நிச்சயம் பெரிதாய் உண்டு  வெங்காய விலை பற்றி உனக்கேன்  கவலை.?  சர்க்கரை பொங்கலுக்கு அது தேவை  இல்லை நாளை ஞாயிறு, கூட்டம் அள்ளும்   உனக்கும் இங்கே வேலை அதிகம்  சிறப்பு தரிசன சேவையில் வந்தேன்  சீக்கிரம் உன்னை பார்த்து முடித்தேன். வேண்டுதல் யாவையும்  தீர்த்து வைப்பாய்  உன் புகழும் நீ காத்து நிற்பாய்.

அப்பா, முதுமை, மரணம்

ஐந்து வயதில் அப்பா இறந்துபோனால் அப்படி அழும் பிள்ளை,   தன் அறுபது வயதில் எண்பது வயது தந்தை இறக்கும் போது அவ்வளவு கலங்காதது ஏன்?.  அப்பாவின் முக்கியத்துவம்  குறைந்து விட்டதோ?  காசும், பணமும், சுற்றமும், நட்பும் அப்பாவின் முக்கித்துவதை குறைத்து விட்டது. இந்த பாசம், நேசம் எல்லாம் பொய்யோ?  நினைத்து பாருங்கள் உங்கள் ஐந்து வயது முதல் மீசை முளைத்து "எல்லாம் எனக்கு தெரியும் " என்று சொல்ல ஆரம்பித்த நாள்  வரை..  அப்பா எப்போ வீடு திரும்புவார் என்று காத்திருந்த மாலை நேரங்கள்,  உலகத்தில் எல்லாம் வல்ல வீரனாய் அப்பாவை நினைத்து இருந்த நாட்கள்.. இதுதான் இயற்கை,  இங்கு எல்லாம் தேவைகள் பொருட்டே,  அப்பா,  அம்மா,  பாசம்  நேசம், நண்பன், மனைவி, மக்கள், அரசு எல்லாம் ஒருவர் தேவை மற்றவர் பூர்த்தி செய்யும் வரைதான்.  இது புரியாமல் தான் நாம் மிகவும் குழப்பமுருகிறோம். எனக்கும் இப்போது ஐம்பது வயது,  என் தந்தையிடம் பேசி ஒரு வாரம் ஆகிறது.    மருந்து,  மாத்திரை,  வேளைக்கு உணவு,  உடை, நல்ல இருப்பிடம்,...

மரணம், இறைவன்

  ஒவ்வொரு மூச்சும் புதிய பிறப்பு  ஒவ்வொரு மூச்சும் புதிய இறப்பு  நேற்றும் இல்லை நாளையும் இல்லை  இன்று என்பது நிரந்தரம் இல்லை  அழிவு  இன்றி  ஆக்கம் இங்கில்லை  அமைதி காக்க மரணம் அவசியம்  மரணம்  காக்க யுத்தம் அவசியம்  அமைதியும், யுத்தமும் அண்ணன் தம்பி  மரணம் பெற்ற இரட்டை பிறவி.  ஆறாம் அறிவால் அவஸ்தைகள் அதிகம்.  ஆறாம் அறிவால் ஆனது என்ன?  கடவுள் படைத்தோம்,  மரணம் மறக்க. மரணம் நம்மை மறக்கவில்லை  இதுவரை நம்மிடம் தோற்கவில்லை. ஆயிரம் ஆயிரம் கோவில்கள் செய்தோம்  காலம் வென்ற கோட்டைகள் செய்தோம் கோட்டையும், கோவிலும் நின்றது இங்கே  கோட்டையும் கோவிலும் செய்தவன் எங்கே?  எதுவும் இங்கே நிரந்தரம் இல்லை  நமதென்று இங்கே எதுவுமில்லை  கடனாய் உடம்பு, கடனாய் மூச்சு  கடனாய் காதல், கடனாய் காமம்  கடனாய் கடவுள், கடனாய் ஞானம்  வீரம், வெற்றி, எல்லாம் கடன்தான்  வீணே இந்த அலட்டல் எதற்கு  கோபம் குறைப்போம், அன்பை வளர்ப்போம்  அமைதியாக அன்பு செய்வோம்  அன்பு மட்டுமே தேவை இ...