பிரார்த்தனை, வேண்டுதல், விரதம் etc..

அமைதியான பண்டமாற்று 
வியாபாரம். 
நான் இப்போது கோவிலுக்குள்ளே !

பூசை, பஜனை,  ஆட்டம் 
பாட்டம், கூட்டம் எல்லாம் 
ஆயிற்று -
அடுத்தது வேண்டுதல்.

பிரசாதம், படையல் எல்லாம் 
உள்ளே எடுத்துவை -இன்று 
நான் விரதம். 

வேண்டுதல் 

மந்திரம், தந்திரம் எல்லாம் உண்டு 
பூசை, படையல் கூட உண்டு 
சிறப்பு தரிசன சேவை உண்டு 
மந்திரி, நடிகர், நடிகை வரவும் உண்டு 
உண்டியல் நிச்சயம் பெரிதாய் உண்டு 
வெங்காய விலை பற்றி உனக்கேன் 
கவலை.? 
சர்க்கரை பொங்கலுக்கு அது தேவை 
இல்லை
நாளை ஞாயிறு, கூட்டம் அள்ளும் 
 உனக்கும் இங்கே வேலை அதிகம் 
சிறப்பு தரிசன சேவையில் வந்தேன் 
சீக்கிரம் உன்னை பார்த்து முடித்தேன். வேண்டுதல் யாவையும்  தீர்த்து வைப்பாய் 
உன் புகழும் நீ காத்து நிற்பாய்.


Comments

Popular posts from this blog

மரணம், இறைவன்