யோசி
21 April "நமக்கு நம்மை தெரியவில்லை மொழி, இலக்கியம் புரியவில்லை பழமையை புதுமை போல் பேசி திரிந்தோம். கேள்விகள் கேட்டல் மிகவும் தொல்லை உண்மையை சந்திக்க தைரியம் இல்லை யோசித்தலை பற்றி பின்பு யோசிப்போம் அறியாமை காற்றை இன்று சுவாசிதோம். மாற்றம் தேவை என மனது சொல்லுது அலுப்புடன் கொஞ்சம் மாற்றி யோசிப்போம் சார்ந்து வாழ்தல் மனித இயல்பு தனித்து வாழ்தல் தவளை வாழ்வு அறிவு, அனுபவம், ஞானம் என்பது மொழி, இனம், தேசம் கடந்தது. குண்டு சட்டி குதிரை ஓட்டம், பயனில்லை இனிமேல் பாதை மாற்று மனதை, புத்தியை கொஞ்சம் திறப்போம் புதிய மொழிகள், கலைகள் கற்போம் தாய் மொழியில் பல புதுமைகள் செய்வோம் ஜாடியில் உள்ள ஊறுகாய் அல்ல நாம், மனிதர்கள், மலர்ந்திட பிறந்தவர்கள். மாற்றம் என்பதை மிதமாய் செய்வோம் ...