முதுமை
முதுமை என்பது இன்னொறு துவக்கம்
வாழ்வின் இதுவே கடைசி துவக்கம்
பயணக்களைப்பு நிச்சயம் இருக்கும்
மறுபடி வாழ்திட மனது துடிக்கும்
பயணக்களைப்பு மனதை அடக்கும்.
தனிமை இல்லா முதுமை வேண்டும்
கூப்பிடு தூரம் சுற்றம் வேண்டும்
நோயற்ற வாழ்வும் குறைவற்ற
செல்வமும் நிச்சயம் வேண்டும்
போதும் என்ற எண்ணம் வேண்டும்
விலகி நிற்கும் பக்குவம் வேண்டும்
சிவ சிந்தனை எனை ஆட்கொள்ள வேண்டும்
மெதுவாய் ‘இதனை’ மறந்திட வேண்டும்
மகிழ்சியான மரணம் வேண்டும்..
Comments
Post a Comment