பெண்
பெண்ணிற்கு பெண்ணிடம் விடுதலை வேண்டும்
பெண்மை பற்றிய புரிதல் வேண்டும்
பெண்கள் இங்கே அனுமன் போல
தன் பலம் அறியாது தவிக்கும் கூட்டம்
பெண் குழந்தைகள் இங்கே பிறந்திட வேண்டும்
வளரும் சூழல் நலமாய் வேண்டும்
பெண்ணின் மன நலம் காத்திட வேண்டும்
கல்வி முறையாய் கிடைத்திட வேண்டும்
இதில் ஆணின் பங்கு நிச்சயம் வேண்டும்
ஆணின் புரிதல் அவசியம் இங்கு
தாயும் ,தமக்கையும் ,தாரமும் பெண்ணே
முகமும் ,மார்பும் ,வயிறும் தாண்டி
பெண்ணை அறிய முயல வேண்டும்
ஆணுக்கிங்கே பெண் கல்வி வேண்டும்
பாடமுறையில் புதுமை வேண்டும்
Comments
Post a Comment