Posts

Showing posts from March, 2023

வியாபாரம்

செல் போன் மணி கேட்டு எடுத்து பேசிய போது மறு முனையில் ஒரு பெண்மணி மிகவும் அமைதியான குரலில் தெளிவாக தன்னை அறிமுகம் செய்து கொண்ட பிறகு " ஜி, நீங்க போன வாரம் நீங்க நம்ம சென்டர்ல சத்சங்கதுக்கு வந்தீங்க இல்ல, நம்ம குருஜி அடுத்த வாரம் நம்ம ஊருக்கு வரார், நீங்க தவறாம நம்ம சென்டர் மெம்பெர்ஸ் கூட குருஜிய பாக்க போகும் போது ஜாயின் பண்ணிக்கணும் " என்று சொன்ன போது, இந்த பெண்மணி இதே விஷயத்திற்காக தன்னை தொடர்பு கொள்ளும் மூன்றாவது நபர் என்று சொல்லத் தோன்றியது. நாகரீகம் கருதி வேரெதுவும் சொல்லாமல் "சரி "என்று சொல்லி இணைப்பை துண்டித்தான் நாராயணன்.கடந்த மூன்று மாதங்களாக இந்த குழுவுடன் இணைந்து இருந்தான். நண்பன் ஒருவனால் அறிமுகப்படுத்தப் பட்டு ஒரு சில மூச்சு பயிற்சிகள் கற்றுக்கொண்டாகி விட்டது. ஒவ்வொரு ஞாயிரும் இந்த குழு கூடி இந்த பயிற்சியை தொடர்ந்து கொண்டு இருந்தனர். நடு நடுவே போன் செய்து "பயிற்சி கன்டினியு செய்யறீங்களா " என்று மாஸ்டர் என்று அழைக்கப்பட்ட நபர் விசாரித்துக் கொண்டு இருந்தார். "இந்த வாரம் புது பேட்ச் ஒன்னு ஆரம்பிக்கிறோம், உங்க நண்பர்கள் யாரையாவது சேர்த்து விடுங...