பேரொளி

"செம்மை நலம் அறியாத சிதடரொடுந் திரிவேனை
மும்மை மலம் அறுவித்து முதலாய முதல்வன்தான்
நம்மையும் ஓர் பொருளாக்கி நாய் சிவிகை ஏற்றுவித்த
அம்மை எனக்கு அருளிய ஆறு ஆர் பெறுவார் அச்சோவே...."

கடைசி திருவாசக பாடல் படித்து முடித்து புத்தகத்தை மூடிய போது ஏதோ  ஏக்கமா, ஏதோ புரிந்து விட்டது போன்ற சந்தோசமா என்ற இனம் புரியாத ஒரு உணர்வு சூழ்ந்தது.  பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எங்கோ ஒரு முப்பத்தி இரண்டு வயது இளைஞன் அதிசயப்பட்டது ஆச்சர்யம் அளித்தது.  "முதலாய முதல்வன் " என்று எப்படி அறிந்து கொண்டான்? தன்னை "நாய் " என ஏன் அழைத்த்துக் கொண்டான்?  பாண்டிய மன்னனின் அமைச்சன் எதை வேண்டுமானலும் அடைந்து இருக்கலாம். கை கட்டி சேவகம் செய்ய ஆயிரம் பேர் இருக்க, கை தட்டி அழைத்தால் ஆயிரம் பெண்கள் இருக்க, அதை விடுத்து "முதலாய முதல்வன்" என்று அந்த பேரொளியை ஏன் தேடிக் கொண்டு இருந்தான் என்று புரியவில்லை. கம்ப்யூட்டரும், செல் போனும், சினிமாவும் இருந்து இருந்தால், வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை அணிந்து வேறு எந்த முதல்வனையாவது பாடி இருப்பானோ?  குதிரை வாங்க சென்றவனை கோவில் கட்டச் சொன்னது எது? சிவன் அந்தணன் வடிவில் தோன்றி இந்த இளைஞர் சொல்ல அனைத்து திருவாசக பாடல்களையும் தன் கைப் பட சிவனே எழுதியதாக அனைவரும் கதை சொல்லிகொண்டு இருந்தனர். "மெய்யே உன் பொன்னடிகள் கண்டுன்று வீடுட்றேன் " என்று வீடுற்றபின் பாட்டு ஏன் பாடிக் கொண்டு இருந்தான் என தெரியவில்லை.  செம்மை நலம் அறியாத அறிவிலிகள் அப்போதும் இருந்து இருக்கிறார்கள். முப்பத்தி இரண்டு வயதில் அனைத்தையும் கொட்டித் தீர்து விட்டு, பேரொளியுடன் கலந்து விட்டான்.இதுதான் என்னுடைய அழுகை, நான் கடந்து விட்டேன், நீயும் உன்வழியில் முயற்சி செய்  என்று சொல்லி சென்று விட்டானோ?
"நம்மையும் ஓர் பொருளாக்கி நாய் சிவிகை ஏற்றுவித்த" என்ற வரிகள் மனதை விட்டு அகலவில்லை...

Comments

Popular posts from this blog

5th Oct 21