வியாபாரம்

செல் போன் மணி கேட்டு எடுத்து பேசிய போது மறு முனையில் ஒரு பெண்மணி மிகவும் அமைதியான குரலில் தெளிவாக தன்னை அறிமுகம் செய்து கொண்ட பிறகு " ஜி, நீங்க போன வாரம் நீங்க நம்ம சென்டர்ல சத்சங்கதுக்கு வந்தீங்க இல்ல, நம்ம குருஜி அடுத்த வாரம் நம்ம ஊருக்கு வரார், நீங்க தவறாம நம்ம சென்டர் மெம்பெர்ஸ் கூட குருஜிய பாக்க போகும் போது ஜாயின் பண்ணிக்கணும் " என்று சொன்ன போது, இந்த பெண்மணி இதே விஷயத்திற்காக தன்னை தொடர்பு கொள்ளும் மூன்றாவது நபர் என்று சொல்லத் தோன்றியது. நாகரீகம் கருதி வேரெதுவும் சொல்லாமல் "சரி "என்று சொல்லி இணைப்பை துண்டித்தான் நாராயணன்.கடந்த மூன்று மாதங்களாக இந்த குழுவுடன் இணைந்து இருந்தான். நண்பன் ஒருவனால் அறிமுகப்படுத்தப் பட்டு ஒரு சில மூச்சு பயிற்சிகள் கற்றுக்கொண்டாகி விட்டது. ஒவ்வொரு ஞாயிரும் இந்த குழு கூடி இந்த பயிற்சியை தொடர்ந்து கொண்டு இருந்தனர். நடு நடுவே போன் செய்து "பயிற்சி கன்டினியு செய்யறீங்களா " என்று மாஸ்டர் என்று அழைக்கப்பட்ட நபர் விசாரித்துக் கொண்டு இருந்தார். "இந்த வாரம் புது பேட்ச் ஒன்னு ஆரம்பிக்கிறோம், உங்க நண்பர்கள் யாரையாவது சேர்த்து விடுங்க " என்ற ஒரு கோரிக்கையும் வந்து கொண்டு இருந்தது.. வாரம் ஒரு முறை பஜனையும், பண்டிகை நாட்களில் சிறப்பு நிகழ்ச்சிகளும், குண்டலினி யோகம் பற்றிய விவாதங்களும் தவறாமல் நடந்து கொண்டு இருந்தது. நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அனைவரும் யோகத்தின் உச்சியை தொட்டுவிட்டவர் போல் நடந்து கொண்டனர்.. சென்டரில் மாட்டப் பட்டு இருந்த தாடி வைத்த குருஜி அமைதியாக எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்தார். சிந்தனையில் மூழ்கி இருந்த நாராயணனை தெருவில் கேட்ட பேச்சு ஈர்த்தது.
"எங்க வீட்ல அஞ்சு ஓட்டுங்க, ரெண்டாயிறம் தான் இது வரைக்கும் குடுத்தாங்க" என்று நைட்டி அணிந்து, மேலே போர்த்தி இருந்த துண்டையும், இடுப்பில் இருந்த குழந்தை யையும் சரி செய்தபடி அந்த பெண்மணி, குட்டையாய், தலைக்கும், மீசைக்கும் டை அடித்து, வெள்ளை சட்டையும் கரை வேட்டியும் அணிந்து இருந்த அந்த ஆளைப் பார்த்து கேட்டுக்கொண்டு இருந்தாள். "பாத்து பண்ணிடலாம்மா, என்று சொல்லியபடியே, அந்த கரை வேட்டி தன் கூட்டதோடு , தான் கொண்டு வந்த காகிதத்தில்ஏதோ குறித்துக் கொண்டு நகர்ந்துது. தனது வீட்டில் எத்தனை ஓட்டு, எத்தனை ஆயிரம் என்று கணக்கு செய்து கொண்டு உள்ளே வந்த போது,
டிவியில் ஒரு பெரியவர் இளைஞர்களைப் பார்த்து " உங்களுக்கு என்ன தெரியும்? நீங்க யாராவது கேள்வி கேட்டு இருக்கீங்களா? நான் ஒரு ஆளா இத்தனை கேஸ் போட்டு இருக்கேன் தெரியுமா?" என்று உரத்த குரலில் பதில் அளித்துக் கொண்டு இருந்தார். இடுப்பு வேட்டி, மேல் அங்கவஸ்திரம், நெற்றியில் பெரிய நாமம் என்று கூட்டதில் இருந்து தன்னை தனியாக அடையாளப் படுத்திக் கொண்டு இருந்தார். அனுஷ்டானம், ஆச்சாரம் என்று பேசியவர் கையில் நவீன செல் போனுடன் இடை இடையே பிழை இல்லா ஆங்கிலம் கலந்து பேசிக்கொண்டு இருந்தார். ஹாலில் அப்பா ஓய்வு நாற்காலியில் சாய்ந்தபடி
" இவர் மாதிரி ஆள் எல்லாம் இல்லன்னா நம்ம கோவில் எல்லாம் யாரும் காப்பாத்த முடியாது, பாவிங்க எவ்ளோ கொள்ளை அடிக்கிறானுங்க, ஹி இஸ் டூயிங் எ கிரேட் ஜாப் " என்று பாராட்டிக் கொண்டு இருந்தார்..காலத்திற்கு தகுந்தவாரு ஆங்கிலமும், செல்போனும் உபயோகிக்க கற்றுக் கொண்டவர், உடையில் மட்டும் ஏன் மாற்றம் செய்யவில்லை.? ஆதி அந்தம் இல்லா அருட் பெறும் ஜோதிக்கு இதெல்லாம் ஒரு பொருட்டா? ஒரு அலட்டல், தான் சொல்வதுதான் சரி என்னும் ஒரு தொனி அவர் பேச்சில் தென்பட்டது. வீம்புக்காக வேடம் இட்டு இதை மாற்றிக் கொண்டால் ஊர் என்ன சொல்லுமோ என்ற எரிச்சல் அவர் குரலில் தெரிந்தது. இன்னும் இவருக்கு கை தட்டல் அதிகம் வேண்டுமோ? எவராவது கேள்வி கேட்டால், "நீங்க என்ன செஞ்சீங்க " என்று முகத்தில் அறைவது போல் பதில் வரும். வெறும் வயிற்றில் கடவுள் தேடல், போராட்டம், தியானம் என்பது இயலாது என்று ஏன் இவர் புரிந்து கொள்ளவில்லை. இவர் நன்றாக சம்பாதித்து, சேமித்து வைத்து, தன் வாழ்கையை கட்டமைத்துக் கொண்டபின் வேஷம் மாறியதோ? "நான் மட்டும் கோர்ட் கோர்டா அலையறேன் , நீ ஒன்னும் பண்ணாம என்ன கேள்வி கேக்க கூடாது "என்பது எவ்வளவு அபத்தம்..

மறுபடியும் செல் போன் மணி அடிக்க, மறு முனையில், "ஹலோ, நாராயணன்,
நேத்து அந்த கஸ்டமர் மீட்டிங் என்ன ஆச்சு? எப்ப ஆர்டர் வரும் " என கேட்டுக் கொண்டு இருக்க, நாராயணன் பதில் சொல்லிய படியே ஜன்னல் அருகே வந்த போது, நான்கு பேர் மாடு பூட்டிய வண்டியில் ஒரு சாமியார் படத்தை வைத்து எடுத்துச் சென்று கொண்டு இருந்தனர்.....

Comments

Popular posts from this blog

5th Oct 21