கேள்வி
மரணத்திற்கு பிறகு என்ன நடக்கும் என்பதை உயிருடன் இருக்கும் தாடி சாமியார் விளக்கி சொல்லிகொண்டு இருக்க, உயிருடன் இருக்கும் கேள்வி கேட்டவரும் நானும் ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டு இருக்கிறோம்..இந்த கேள்விதான் உலகத்தில் மிக அதிகமாக கேட்கப்பட்ட கேள்வியாக இருக்கும்.
ஒவ்வொரு முறை பதில் பெற்ற பின்பும் பெரிதாய் ஒன்றும் மாறவில்லை.. கூட்டம் முடிந்து சமோசா சாப்பிட்டு வீட்டிற்கு சென்றதைத் தவிர. இது ஒரு விதமான ஏமாற்றும் வேலை. எந்த பதிலும் சரியானது இல்லை என கேட்பவருக்கும், பதில் சொல்லுபவருக்கும் நிச்சம் தெரியும்.
இதை விட எப்பொழுது மரணம் நிகழும் என்பதை துல்லியமாக அறிய முடியுமா என கேள்வி கேட்கலாம்.. அதற்கும் ஏதாவது பதில் வைத்திருப்பார் சாமியார்...இந்த மாதிரி கேள்விகளுக்கு பதில் கிடைத்து விட்டாலும் என்ன செய்து விடுவார்கள் என தெரியவில்லை...
Comments
Post a Comment