ஆட்டம்
"வெற்றி " இந்த மூன்றெழுத்துதான் உலகத்தின் அனைத்து நிகழ்வுகளுக்கும் காரணம். யார் யாருக்கு சமம் என்பதை விட யார் யாரை விட உயர்ந்தவர் என்பதில்தான் மொத்த மனித குலமும் கவனம் செலுத்திக் கொண்டு இருக்கிறது . வெற்றி என்பது பலவிதம். "எனக்கு சாமி தரிசனம் ரொம்ப நல்லா கெடச்சுது " என்று சொல்லும் போது தனக்கு தரிசனம் கிடைத்த சந்தோஷத்துடடன் எதிரில் உள்ளவனுக்கு கிடைக்க வில்லை என்ற நூலிழை போன்ற ஒரு எண்ணமும் ஒரு வகை வெற்றிதான். இது இன்று நேற்று சொல்லிக் கொடுக்கப்பட்டது அல்ல..மனிதன் மறக்காமல் இருக்கும் மிருக குணம். வெற்றி நோக்கி ஓடு, இல்லை என்றால் ஓடுவது போல் நடி. கூட்டதுடன் சேர்ந்து "வாழ்க " சொல். வெற்றி பெற்றவர்களுடன் சேர்ந்து இரு. இந்த இலக்கணப்படிதான் எல்லாம் நடந்து கொண்டு இருந்தன. வெற்றி பெற்றவன் வாழ்கை பூதக் கண்ணாடி கொண்டு ஆராயப்படும். அனைத்து அசைவுகளும் விமர்சிக்கப்படும். எப்போது கீழே விழுவான் என காத்து இருக்கும். விழுந்தவுடன் விலகி ஓடும். கை தட்டி " எனக்கு அப்பவே தெரியும், பெரிய பிராடு பா அவன் ", "வாய்ல இருந்து லிங்கம் எடுத்தப்பவே நெனைசேன் ", "அவுரு புது வண்டி வாங்கி இருக்காப்ல, எப்படியா காசு வருது?" என்று கேன்டீனில் சாப்பிட்டுவிட்டு பல் குத்திக் கொண்டு கேள்வி கேட்கும். வெற்றி பெற்றவன் ஒரு பழுத்த மரம் போன்றவன். பூவும், காயும், பழமும் இருக்கும் வரை அனைவருக்கும் பயன் படும். கல் ஏறிந்து பழம் திருடியவனுக்கும் அது தேவைப் படும். பயன் இல்லை எனில் வேரோடு பிடுங்கி எரியப்படும்.
காந்திலால் ஷாவும் இரண்டு நாட்களாக நிறைய கல்லடி வாங்கிக் கொண்டு இருந்தார். இது புதிது இல்லை என்றாலும், எதற்கு அடி படுகிறோம் என தெரியாமல் அடி வாங்கிக் கொண்டு இருந்தார். எத்தனை நாள் இந்த தாக்குதல் தொடரும், யார் தாக்குகிறார்கள் என்பது தெரியாமல் அவஸ்தைப் பட்டுக் கொண்டு இருந்தார். அர்ஜுனை வீழ்த தன்னை அபிமன்யுவாக்குகிறார்களோ என்ற சந்தேகம் எழுந்தது. இருபத்தியொரு வயதில் பம்பாயில் வைரம் பட்டை தீட்டுதலில் ஆராம்பித்து, வைரம் வாங்கி விற்கும் வியாபாரம் செய்து வாழ்கையை தொடங்கிய குஜராத்தி இளைஞன் இப்படி இந்த உயரம் அடைந்தது எப்படி என்று ஒரு கேள்வி எப்போதும் எல்லோர் மனதிலும் ஓடிக்கொண்டு இருந்தது. இத்தனை நாள் தெளிவாக காய் நகர்த்திய காந்திலால், சறுக்கியது எங்கே என்று மூளையை குடைந்து கொண்டு இருந்தார். யாரோ யாரையோ பழிவாங்க இவர் மீது அம்பு எய்து கொண்டு இருந்தனர் என்பது தெளிவாக புரிந்தது. எவனோ ஒரு வெள்ளையன் பற்ற வைத்த நெருப்பு திட்டமிட்டு ஊதி பெரிதாக்கப் பட்டது. ஒரு வாரமாக அனைத்து நிருவனங்களின் பங்குகளும் கடுமையாக சரிந்து கொண்டு இருந்தன. இத்தனை நாள் கவனமாக ஊதி பெரிதாக்கிய பலூனில் ஊசி ஏற்றி வெடிக்க வைக்கப்பட்டது. டிவி யிலும் பத்திரிகையிலும் காந்திலால் பற்றி பேசி பேசி ஒயவில்லை. அனைவரும் கண்ணீர் அஞ்சலி செய்ய காத்து இருந்தனர். திருப்பி அடிக்கவேண்டும் என்கிற வெறி தலைக்கு ஏரியது. இல்லை என்றால் பேசிப் பேசியே சமாதி கட்டி விடுவார்கள் என தெளிவாக புரிந்தது. ஆனால் என்ன செய்வது என்று விளங்க வில்லை. கொஞ்ச நாள் அமைதி காக்கும்படி அறிவுறுத்தப்பட்டது. " குச் தின் ஆராம் கரோ, தேக்தே ஹைன் " என்று சமாதானம் சொல்லப்பட்டது.
காந்திலால் எழுந்து நின்றார், கோப்பையில் இருந்த கடைசி சொட்டு டீயை உறிஞ்சி குடித்தபின், இன்டர்காமில் யாரையோ அழைத்து ஏதோ உத்தரவிட அடுத்த முப்பது நிமிஷதில் அவரது அலுவலகம் பரபரப்பகியாது.. துபாய், லண்டன், அமெரிக்கா என அனைத்து இடங்களிலும் தொலைபேசி அலறியது. குஜராத்தியிலும், ஆங்கிலதிலும், ஹிந்தியிலும் தொடர்ந்து விவாதிக்கப்பட்டது.
அபிமன்யு வெற்றி அடைவதாக கருவமுற்று சக்ர வியூகத்தில் நுழைந்தான்.. "கடமையை செய் பலனை எதிர் பாராதே " என்ற கண்ணனின் வார்த்தைகள் அர்ஜுனனின் நினைவுக்கு வந்தன. அர்ஜுனன் அடுத்த வெற்றிக்கு திட்ட மிட்டு கொண்டிருக்க, கௌரவர் சேனை அபிமன்யுவை சுற்றி வளைத்தது..
Comments
Post a Comment