நிருபன் - மைக்ரோ ஸ்டோரி
கதிரேசன் ஐந்தாவது முறையாக பைக்கை உதைத்து ஸ்டார்ட் செய்ய சோம்பல் முறித்து முனகியபடி பைக் ஸ்டார்ட் ஆனது. அலுவலகம் விட்டு கிளம்பி அடுத்த ஐந்தாவது நிமிடம் சாலையோற டீக் கடையில் நிறுத்தி, "ஒரு கிளாசிக் மைல்டு குடுப்பா " என்று சொல்லி வாங்கி பற்ற வைத்து புகை இழுத்த போது மணி காலை 10.55.. இன்னும் நாற்பது நிமிடத்தில் காவி கட்சி அலுவலகம் சென்றடைய வேண்டும். அவசரத்தில் ஹெல்மெட் கழட்டாமலே சிகரெட் இழுத்துக் கொண்டு இருந்தது நினைவு வந்தது. ஹெல்மெட் போல இந்த பத்திரிகை நிருபர் வேலையும் இம்சைதான்.
கதிரேசனுக்கு திண்டிவனம் பக்கம் பூர்வீகம், அப்பா அரசு பணியில் ஓய்வு பெறுவதை நோக்கி ஓய்வு எடுத்துக் கொண்டு இருந்தார். கதிரேசன் வம்சத்தில் முதல் பட்டாதாரி. சின்ன வயது முதலே சினிமாவும், அரசியலும், தமிழும் நன்றாக அவனை செதுக்கி இருந்தன. திண்டிவனம் அப்படி ஒன்றும் பரபரப்பான இடமும் இல்லை. அரசினர் கலை கல்லூரியில் பி ஏ தமிழ் படித்து, தனியார் செய்தி தொலைகாட்சி ஏற்படுதிய தாக்கத்தால் எப்படியாவது பத்திரிகை நிருபர் ஆக வேண்டும் என முடிவு செய்தான். தினமும் இரவு 9 மணிக்கு ஒரு வட இந்தியன் ஐந்து, ஆறு பேரை கூட்டி வைத்து சத்தம் போட்டு பஞ்சாயத்து பண்ணுவது அவன் தவறாமல் பார்க்கும் நிகழ்ச்சி. நடு நடுவில் " கண்ணே உன் கண்கள் என்ன கொசு வலையா, இல்லை மீன் வலையா " என்று கவிதை எழுதி சினிமா ஆசையும் கொஞ்சமாக வளர்த்துக்கொண்டு இருந்தான். தமிழ் நாட்டு அரசியல் தாண்டி அவனுக்கு அவ்வளவாக பெரிதாய் அறிந்து கொள்ள விருப்பம் இல்லை. அவனை பொறுத்தவரை நிருபர் என்றால் கேள்வி கேட்க வேண்டும், எப்படி வேண்டுமானாலும் கேட்கலாம் என்ற புரிதல் ஆழமாக இருந்தது. கேள்வி கேட்பது சுலபமாக இருந்தது.. " என்னா சூப்பரரா மடக்கிட்டாம்பா " என்று ஒரு பெரிய குடும்பத்து இளம் அரசியல் தலைவர், கண்ணாடி போட்ட நிருபர் முன் பதில் தெரியாது தவித்ததை ரசித்தான்.
சென்னையில் இந்த சின்ன தொலைக் காட்சி நிறுவத்தில் தெரிந்த நண்பன் மூலம் வேலையில் சேர்ந்து இரண்டு வருடம் ஆகிறது.. என்னஜி, வாங்கஜி, போங்கஜி என்று பேசவும் கொஞ்சம் உடைத்து உடைத்து ஆங்கிலம் பேசவும் கற்றுக்கொண்டாகிவிட்டது.. செல்போணும், கிளாசிக் மைல்டும், சினிமா பாடல் வெளியிட்டு விழா அனுமதியும், இவனை போன்ற 'இலட் சியம்' உள்ள நண்பர்களும், ஒவ்வொரு ஞாயிரு மது அருந்துவதும், மாங்காடு கோவில் செல்வதும் வாழ்கையின் ஒரு அங்கம் ஆகி விட்டது.
அரசியல் நிருபர் வேலை அப்படி ஒன்றும் கடினம் இல்லை, எல்லா தொலைக் காட்சி நிறுவனமும் ஏதாவது கட்சி சேர்ந்தவர்கள்தான் நடத்தி கொண்டு இருந்தார்கள். அவர்கள் கேட்க சொல்லும் கேள்வியை கேட்கவேண்டும், சொல்லும் பதிலை பிரசுரிக்க வேண்டும், எந்த தலைவரை மடக்கி கேள்வி கேட்ட வேண்டும் என்று தெளிவாக சொல்லி தரப்பட்டது. அதிகமாக விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
கடந்த ஒரு வருடமாக யாரோ ஒரு இளைஞர், படித்தவர், காவி கட்சியின் தலைவராக வந்த பிறகு நிலைமை மாறி வருகிறது.. புள்ளி விவரம், அனைத்து துறைகளையும் பற்றிய அறிவும், நேர்மையும் அரசியல் களத்திற்கு கொஞ்சம் புதிதுதான். அவர் உங்களை பற்றி இப்படி சொன்னார், அந்த நடிகை இப்படி சொன்னார், புதியதாக வந்த திரைப்படம் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்பதை தாண்டி வேறு கேள்வி கேட்க மெனக்கெட வேண்டியுள்ளது..
மறுபடியும் பைக்கை ஸ்டார்ட் செய்து புறப்பட்ட போது தேவைல்லியமல் அந்த ஒன்பது மணி விவாதம் நடத்தும் வட நாட்டு மனிதன் முகம் நினைவில் வந்தது அதனோடு ஹெல்மெட் இருக்கத்தால் கழுத்தின் பின் புறம் வியர்வையும்......
Note: எழுத்துப் பிழைகள் இருக்கும்... மன்னிக்கவும்... Typed in mobile..
Comments
Post a Comment