கர்ணன்

சிறுமி செய்த தவறு 

குழந்தை அதனின் விளைவு 

ஆற்றோடு சென்ற  அவலம் 

சூரியன் மறந்த கிரணம் 

கர்ணன், குந்தியின் புத்திரன் 

துரியனின் மித்திரன் 

அவன் , மாசு படிந்த வைரம் 

தீயவர் கை அடைந்த செல்வம் 

அவன் நட்புக்கு இலக்கணம் 

ஆம், கூடா நட்புக்கு.

சூரியன் பெற்ற மக்குப் பிள்ளை 

தன் பலம் மறந்த தற்குறிப் பிள்ளை.

சாபம் அனைத்தும் கேட்டுப் பெற்றவன் 

அழிவை அழைத்து அழகு பார்த்தவன் 

தேரோட்டி வளர்த்த தத்துப் பிள்ளை ........

Comments

Popular posts from this blog

5th Oct 21