காதல்

கண்ணான கற்பகமே,
நான் கண்டெடுத்த அற்புதமே,
ஒத்த ஜடை ஓவியமே
நான் தெனம் ரசித்த காவியமே,
கை பிடித்து நீ நடக்க,
நம்பிக்கை நான் கொடுக்க,
காற்றில் நம் பேச்சு சலசலக்க,
நேரம் மறந்து கலந்து இருந்த,
காலங்கள் பற்றி என்ன சொல்ல.
காலங்களுக்கு நரை விழுந்து,
கண்களிலே திரை விழுந்து,
முதுகு தண்டு முன் வளைந்து,
மூப்படைந்து முடங்கினாலும்.
முதல் காதல் முடிவதில்லை.
நினைவுக்கு வயதில்லை.
ஆசைக்கு அளவில்லை.

#love #kadhal #Ninaivugal

Comments

Popular posts from this blog

5th Oct 21