ஹைக்கூ
தேடல்
நான்,
கடவுள் தொலைத்த பொம்மை
அவனுக்கு தேடவும் நேரம் இல்லை.
வரம்
அம்மாவின் முலை கடித்து
அவள் மார்பில் முகம் புதைத்து
படுக்கையை தினம் நனைத்து
ஆயிரம் ஆயிரம் அடம் பிடித்து
அவள் தூக்கம் தினம் கெடுத்து
வளர்ந்தது வரம் தானே?
காலம்
அப்பாவின் அடி வாங்கி, அம்மாவின் வசை வாங்கி,
அண்ணனின் உடை வாங்கி, கணக்கில்
கடன் வாங்கி,
கழிந்த அற்புதக் காலம்
வலி
நண்பர்கள் கூட்டம் நக்கல் செய்ய,
முதல் காதலை கொஞ்சம் முயற்சி செய்த
முதல் தோல்வியின் வலி
முதுமை வரை.
Comments
Post a Comment