கண்மூடி
கண் மூடி உள்ளே சென்று
விழி நடுவே உணர்வை நிறுத்தி
சுவாசத்தை சீராக்கி பழகும் வித்தை.
இடைஞ்சல்கள் இதிலும் உண்டு
வழி முறை பலவும் உண்டு
வழி பற்றி கவலை வேண்டாம்
பயணத்தை மேற்கொள்வோம் நாம்
பயம் கொள்ள தேவையில்லை
படைத்தவன் பார்த்துக் கொள்வான்.
தூக்கமும் ஒரு நாள் மறையும்.
மனதின் ஆழம் தெரியும்.
உடலையும் தாண்டி, மலை, செடி
கடல், வெளி முழுதும் பரவி நிற்க,
உயிர் எல்லாம் ஒன்றாய் விளங்கும்
அனுபவம் அரிதாய் அமையும்.
மாற்றம் மிக மெதுவாய் நிகழும்
தனியே விழித்திருக்கும் போதும்
கூட்டமாய் அலையும்போதும்
செயல் எதுவும் செய்யும் போதும்
மனைவி, கணவன், மக்கள், பெற்றோர்
மற்ற சுற்றங்கள் சுற்றும் போதும்
விலகி நிற்க கற்க வேண்டும்.
விலகுதல் விலக்குதல் இல்லை.
சிந்திக்க தொடங்குவோம் நாம்..
....தொடரும்
Comments
Post a Comment