சாய் வந்தனம் - Tribute to Sai


1.சாயி உந்தன் திருவடி போற்றி
 காக்கும் உந்தன் கருணை போற்றி
 சீரடி வாழும் சிகரம் போற்றி
 கங்கை தரித்த சிவனே போற்றி

2.நோயை தீர்க்கும் மருந்தே போற்றி
  எந்தன் வாழ்வில்  வந்தாய்  போற்றி
  முந்தைய நல் வினையே போற்றி
  துயரம் துடைத்து அருளுக போற்றி

3.உதியால் வினை தீர்த்தாய் போற்றி
 எங்கள் இல்லம் நிறைவாய் போற்றி
 சுற்றம், நட்பு காப்பாய் போற்றி
 நல்ல விருப்பம் நிறைவேற போற்றி

4.பெற்றோர் உடல் நலம் பேணுக போற்றி
  பெற்றது நன்றாய் தழைத்திட போற்றி
  கட்டிய தாரம் சிறந்திட போற்றி
  உடன் பிறந்தோர் அகம் நிறைவாய்   போற்றி

5.பல ரூபம் காட்டும் திருவே போற்றி
  எளியோரின் இறைவா போற்றி
 அல்லா மாலிக் என்றாய் போற்றி
  நீரில் தீபம் ஏற்றினாய் போற்றி

6.நாட்டை செழிக்க செய்வாய் போற்றி
  மழையை பொழிக்க வல்லாய்  போற்றி
  அமைதி எங்கும் அருளுக போற்றி
  நினைவில் நீங்காதிருக்க போற்றி

7.செய்யும் தொழில் சிறந்திட போற்றி
  உன்னை அன்றி துணை இல்லை  போற்றி
 போதிய வெற்றி வேண்டும் போற்றி
 எளிமை பழக அருளுக போற்றி

8.என் கவிதை வளர அருள்வாய் போற்றி
 ஓவியம் சிறப்பாய் அமைய  போற்றி
 கற்பனை பெருகிட அருள்வாய் போற்றி
 என் சிந்தனை சிறக்க செய்வாய் போற்றி

9.தூரிகை வண்ணம் ஆவாய் போற்றி
 என் எண்ணமும் சொல்லும் நீயே போற்றி
 பணியில் வெற்றி அருள்வாய் போற்றி
 சீரடி பயணம் அமைய போற்றி

10.குறைகளை மன்னித்து அருளுக        போற்றி
  கருவம் களைந்து திருத்துக போற்றி
  சாயி போற்றி,  சய, சய போற்றி 
  துணையாய் என்றும் நிற்பாய் போற்றி.
  
  

------------------------------------x--------------------------------------

Comments

Popular posts from this blog

5th Oct 21