தொடக்கம்

முதலில் நன்றி படைத்தவனுக்கு
கருணை நம் மேல் பொழிந்தவனுக்கு
இரவு முடிந்தது, விடியல் பிறந்தது 
இன்னும் ஒருநாள் வாழக்  கிடைத்தது.
புத்தம் புதிய துவக்கம் செய்வோம்.
வாழ்வின் முதல் நாள் போல நினைப்போம். 
நேற்றைய தவறுகள் நினைக்க வேண்டாம்.
நாளைய கவலைகள் இன்று வேண்டாம். 
இன்று மட்டும் வாழ்ந்து பார்ப்போம். 
முடிந்த வரையில் முயன்று பார்ப்போம்.
வெற்றியை கொஞ்சம் வென்று பார்ப்போம் 
நன்றாய் தொடங்கி நன்றாய் முடிப்போம் 
மறுமுறை ஒருநாள்  வாழ்ந்து பார்ப்போம்.


-திருச்சிற்றம்பலம்-

Comments

Popular posts from this blog

மரணம், இறைவன்