இன்பம் விற்பவள்
மையும், உடையும் ஒப்பனையும்
கலைந்து போச்சு மறுபடியும்
மறுபடி சரிசெய்ய மனமில்லை
உடம்பும் முன் போல் திடமில்லை
வேறு வேலை தெரியவில்லை
வேசி வாழ்கை விதியாச்சு
வயிறு வளர்க்கும் வழியாச்சு
நோயும் இங்கே துணையாச்சு
காசு கொடுத்து காமம் தேடலும்
காசு வாங்கி கற்பை இழப்பதும்
இன்று நேற்று நடப்பதல்ல
இரவு எனக்கு பகலாச்சு
விடியல் என்பது கனவாச்சு
சிறுவன், குமரன், கிழவன் என
ஆயிரம் ஆண்களை பார்த்தாச்சு
அத்தனை அழுக்கும் சுமந்தாச்சு
நான் ஏன் எப்படி இத்தொழிலில்?
விருப்பமோடு வரவில்லை.
என்னை விற்கப்பட்டது நினைவில்லை.
அண்ணன், தம்பி எனக்கில்லை
'அக்கா', 'மாமா' என்பதெல்லாம்.
ஆசையாய் அழைகும் உறவில்லை.
மனுஷியாய் என்னை மதிப்பதில்லை
...........
இது இன்னும் தொடரும்... இதற்கு மேல் இன்று எழுத இயலவில்லை....
Comments
Post a Comment