'அது' -'சிவன்'



1.ஆதியும் அந்தமும் இல்லாதது அது 
   என்னை கொஞ்சம் தொட்டு நகர்ந்தது  
   மனித ஸ்பரிசம் போன்றதில்லை அது 
   என்னால் விளக்க முடியாதது அது 

2.நானும் அதுவும்  வெவ்வேறில்லை 
   இத்தனை நாள் இது  தெரியவில்லை 
   வெளியில் பல முறை தேடிப்பார்த்தேன் 
   கண்களை மூடி சூரியன் பார்த்தேன் 

3.எல்லா படைப்புக்கும் காரணம் உண்டு 
   அதனின் அமைப்பு எங்கும் உண்டு 
   காரணம் இன்றி காரியம் இல்லை 
   சும்மா என்று இங்கு எதுவும் இல்லை 

4.எல்லா இயக்கமும் அதனின் இயக்கம் 
   முடிவு என்பது அடுத்த இயக்கத்தின் 
   முன் கதை சுருக்கம், 
   இதுவே வாழ்கையின் வெற்றி ரகசியம் 

5.நம்மிடமிருந்து நாம் விலகி நிற்போம் 
   நம்மை நாமே தேடிப் பார்ப்போம் 
   கடனாய் பெற்ற உடலை காப்போம் 
   நன்றியோடு தினமும் வாழ்வோம் 

6.விலகுதல் என்பது விழித்து இருப்பது 
   நிலை இல்லாமையை அறிந்து   இருப்பது 
   இந்தப் புரிதல் கருணை வளர்க்கும் 
   கருணை, அன்பும் அமைதியும்     வளர்க்கும் 

7.விழிப்பு நிலையில் வாழ்கை சிறக்கும் 
   அதனின் அருளொளி அற்புதம்    நிகழ்த்தும் 
   வாழ்கை பயணம் சுகமாய் அமையும் 
   அருளொளி பயணம் முழுதும் தொடரும் 

8.வாழ்கை முழுதும் அர்ப்பணம்     செய்வோம் 
    அதனின் அமைப்பை  எங்கும் 
    உணர்வோம்
    உணர்வே இங்கு பிரார்த்தனை ஆகும் 
    உடலும் செயலும் கோவிலாகும் 

    அதனை உணர்ந்து அனுபவிப்போம் 
    கவலை மறந்து மகிழ்ந்திருப்போம் 
    
                 -----அன்பே சிவம் ---


Comments

Popular posts from this blog

5th Oct 21