Popular posts from this blog
மரணம், இறைவன்
ஒவ்வொரு மூச்சும் புதிய பிறப்பு ஒவ்வொரு மூச்சும் புதிய இறப்பு நேற்றும் இல்லை நாளையும் இல்லை இன்று என்பது நிரந்தரம் இல்லை அழிவு இன்றி ஆக்கம் இங்கில்லை அமைதி காக்க மரணம் அவசியம் மரணம் காக்க யுத்தம் அவசியம் அமைதியும், யுத்தமும் அண்ணன் தம்பி மரணம் பெற்ற இரட்டை பிறவி. ஆறாம் அறிவால் அவஸ்தைகள் அதிகம். ஆறாம் அறிவால் ஆனது என்ன? கடவுள் படைத்தோம், மரணம் மறக்க. மரணம் நம்மை மறக்கவில்லை இதுவரை நம்மிடம் தோற்கவில்லை. ஆயிரம் ஆயிரம் கோவில்கள் செய்தோம் காலம் வென்ற கோட்டைகள் செய்தோம் கோட்டையும், கோவிலும் நின்றது இங்கே கோட்டையும் கோவிலும் செய்தவன் எங்கே? எதுவும் இங்கே நிரந்தரம் இல்லை நமதென்று இங்கே எதுவுமில்லை கடனாய் உடம்பு, கடனாய் மூச்சு கடனாய் காதல், கடனாய் காமம் கடனாய் கடவுள், கடனாய் ஞானம் வீரம், வெற்றி, எல்லாம் கடன்தான் வீணே இந்த அலட்டல் எதற்கு கோபம் குறைப்போம், அன்பை வளர்ப்போம் அமைதியாக அன்பு செய்வோம் அன்பு மட்டுமே தேவை இ...
Comments
Post a Comment